ஹொரோயின் போதைப்பொருள் முகவராக செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண் ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரின்(40313) தகவலுக்கமைய செயற்பட்ட பொலிஸ் குழுவினர் திங்கட்கிழமை(13) அதிகாலை 33 வயது மதிக்கத்தக்க போதைப்பொருள் வியாபாரி வெள்ளையன் என அப்பகுதி மக்களினால் அழைக்கப்படுகின்ற முஹமட் ஹனீபா அர்சத் என்பவரை சாய்ந்தமருது பகுதியில் வைத்து கைது செய்தனர்.
பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். ரவூப் தலைமையில் சென்ற பொலிஸ் சார்ஜன்ட்களான எம்.எம்.எம். அன்வர் (63037) பொலிஸ் கன்ஸ்டபிள்களான வை.நவராஜ் (8475) எம்.இஷாக்(76433) ராஜபக்ஸ ( 86765) எஸ்.தர்சீகன்(99058)ஆர்.ஹேமானந்
குறித்த சோதனை நடவடிக்கையின் போது கல்முனை பகுதி செயிலான் வீதியில் அமைந்துள்ள சந்தேக நபரின் சகோதரியின் வீடு மற்றும் சாய்ந்தமரது பகுதியில் உள்ள சந்தேக நபரின் வீடும் பொலிஸ் குழுக்களினால் சோதனைக்குள்ளாக்கப்பட்டது.
இதன் போது ஒரு தொகுதி போதைப்பொருட்கள் 2 அதி நவீன ஸ்கேனர்கள் சிசிடிவி டிவீஆர் உபகரணம் பதிவு செய்யப்படாத ட்ரோன் பறக்கும் சாதனம் உள்ளிட்டவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
குறித்த வீட்டில் இருந்த சந்தேக நபரின் சகோதரியான 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் கல்முனை தலைமையக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)

Post a Comment
Post a Comment