வி.சுகிர்தகுமார் 0777113659
ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட 'பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும், தமிழரும்' எனும் 359 பக்கங்களை கொண்டதான ஆய்வு நூல் வெளியீட்டு விழா நேற்று (12)ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் மிகசிறப்பாக இடம்பெற்றது.
ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன். புதிய வருடத்தின் முதல் நிகழ்வாக இந்நூல் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வரலாற்று சிறப்பு மிக்கதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்நூலினை அம்பாரை மாவட்டத்தின்; மிகப்பெரும் ஆய்வாளராக கருதப்படும் ஆய்வார்வலரும், தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்கள் நூலாசிரியராக இருந்து உருவாக்கியுள்ளதுடன் 359 பக்கங்களை கொண்டதாகவும் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் உருவாக்கத்திற்கான நிதி ஏற்பாட்டினை ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை வழங்கியுள்ளதுடன் வெளியீடு செய்து வைக்கும் பொறுப்பினையும் ஏற்றுக்கொண்டது.
அக்கரைப்பற்று தமிழ்ச்சங்கத்தின் கௌரவ தலைவர் ஓய்வு நிலை அதிபர் க.இரத்தினவேல் தலைமையில் இடம்பெற்ற ஆய்வு நூல் வெளியீட்டு நிகழ்வில் இமயமலை ரிசிகேசு சுவாமிகள் நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அருளாளராக கலந்து கொண்டதுடன் பிரதம அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா மற்றும் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளில் சிறப்பு அதிதிகளாக -தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சேனாதிராஜா ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி பீடாதிபதி த.கணேசரெத்தினம் அக்கரைப்பற்று வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் பிரபல வர்த்தர் நன்கொடையாளர் எஸ்.பரநாதன் - ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை ஸ்தாபகர் செல்லத்துரை விக்னேஸ்வரமூர்த்தி உள்ளிட்ட கல்வியலாளர்கள் அரச உயர் அதிகாரிகள் இலக்கியவாதிகள் சமூக ஆர்வலர்கள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என அனைத்து நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
வரவேற்பு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து இறைவணக்கத்தை செல்வி சு.யதுர்ஷா வழங்க தமிழ்மொழி வாழ்த்துப்பாவினை செல்லி லோ.சாமந்தி இசைத்தார். அடுத்து சுவாமிகள் நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் ஆசியுரையை வழங்க வரவேற்புரையினை தமிழ்ச்சங்க இணைத்தலைவர் ந.சுதாகரனும் தலைமையுரையினை தமிழ்ச்சங்க தலைவர் த.இரத்தினவேலும் ஆற்ற வரவேற்பு நடனத்தை நர்த்தன சிவாலய மாணவிகள் வழங்கினர்.
நூல் வெளியீட்டு உரையினை ஓய்வு நிலை ஆசிரியர் சா.புண்ணியமூர்த்தி ஆற்ற ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை ஸ்தாபகர் செல்லத்துரை விக்னேஸ்வரமூர்த்தி நூல் வெளியீடு செய்து வைத்த நிலையில் முதற் பிரதியை பிரபல வர்த்தர் நன்கொடையாளர் எஸ்.பரநாதன் பெற்றுக் கொண்டதுடன் நூலாசிரியர் 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி சுவாமிகள் நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் அவர்களுக்கும் ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை ஸ்தாபகர் செல்லத்துரை ஏனைய அதிதிகளுக்கும் நூலினை வழங்கி வைத்தார்.
பின்னர் நூல் நயவுரையினை தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி க.இரகுபரன் ஆற்றியதுடன் அதிதிகளின் உரையும் இடம்பெற்றுது.
நிறைவாக கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராஜா ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை ஸ்தாபகர் செ. விக்னேஸ்வரமூர்த்தி பிரபல வர்த்தர் நன்கொடையாளர் எஸ்.பரநாதன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நூலாசிரியர் 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்கள் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
இறுதியாக நூல் வெளியீட்டிற்காக அர்ப்பணிப்போடு உழைத்த ஓய்வு நிலை ஆசிரியர் சா.புண்ணியமூர்த்தி மற்றும் ஓய்வு நிலை அதிபர் வெ. கனகரெத்தினம் தமிழ்ச்சங்க உறுப்பினர் சி.கனகரெத்தினம் ஆகியோர் ஜீவாதார சித்தவித்தியா அறக்கட்டளை ஸ்தாபகர் செ. விக்னேஸ்வரமூர்த்தியினால் விசேடமாக கௌவிக்கப்பட்டதுடன் நுலாசிரியர் ஏற்புரை வழங்க தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் ஓய்வு நிலை விரிவுரையாளர் நா.செல்வநாதனின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றுது,
நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் ஒருங்கிணைப்பை ஊடகவியலாளர் வி.சுகிர்தகுமார் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment