(சுகிர்தகுமார்) 0777113659
அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவரும் மற்றும் சுவாட் அமைப்பின் தலைவருமான வ.பரமசிங்கம் அவர்கள் நேற்றிரவு முன் (28) விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் இன்று (29) அவரது இறுதிக்கிரியைகள் தம்பட்டை பொதுமயானத்தில் இடம்பெற்றது.
அலுவலக வாகனத்தில் கடமையின் நிமித்தம் கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோதே வெலிக்கந்தை செவனப்பிட்டி பிரதேசத்தில் மரக்கறி ஏற்றிவந்த லொறி ஒன்றுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றது.
விபத்தில் வாகனத்தை செலுத்திய ஒரு பிள்ளையின் தந்தையான பரமசிங்கம் பலியானதுடன் வாகனத்தின் சாரதி பலத்த காயங்களுடன் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த மற்றுமொரு உத்தியோகத்தர் சிறு காயங்களுடன் அதிஷ்வசமாக உயிர் பிழைத்தார்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் இறுதிச்சடங்குகள் தம்பட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றதுடன் இதில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் கல்விமான்கள் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் பங்கேற்றதுடன் இரங்கல் உரையினையும் ஆற்றினர்.
இதன் பின்னராக அவரது பூதவுடன் தம்பட்டை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உயிரிழந்த வ.பரமசிங்கம் சமூக ஜோதி செந்தூரராஜாவினால் உருவாக்கப்பட்ட சுவாட் அமைப்பின் நீண்ட கால உத்தியோகத்தர் என்பதுடன் தற்போது அம்பாரை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் தலைவராகவும் மற்றும் சுவாட் அமைப்பின் தலைவராகவும் செயற்படுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கனுடன் இணைந்து செயற்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் இனநல்லுறவு தொடர்பில் அதிக அக்கறை செலுத்தியவர் என்பதுடன்; அம்பாரை மாவட்டம் மாத்திரமன்றி தேசிய ரீதியிலும் அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என பாடுபட்டவர்.
அன்னாரது இழப்பு தொடர்பில் பல்வேறு அரச அரசசார்பற்ற நிறுவனங்களும் சமூக அமைப்புக்களும் தனிநபர்களும் ஆழ்ந்த அஞ்சலியினை தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment
Post a Comment