இந்தியாவின் வெற்றியைப் பறித்த 'அந்த ஒரு ஓவர்'



 


சூர்யகுமாரின் டக் அவுட், விராட் கோலி செய்த ஒரு தவறு, அக்சர் படேலின் ரன் அவுட் இவை அனைத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவின் ஒரேயொரு ஓவர் இந்திய அணியின் வெற்றியை முற்றிலுமாக பறித்திருக்கிறது.

முக்கியமான தருணங்களில் இந்தியா செய்த சில தவறுகளால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு கை நழுவிப் போயிருக்கிறது.

சென்னை மைதானத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

தொடர்ந்து 4 முறை சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை வென்று வந்த இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது ஆஸ்திரேலியா.