போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி.ஆர்.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் 2022.12.02 அன்று இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய, மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தி.தெட்சணகௌரி அவர்களின் அனுமதியுடன் போரதீவுப்பற்று - மண்முனை தென்மேற்கு எல்லைக்கிராமங்களில் 2023.03.22 புதன்கிழமை காலை போதைப்பொருள் ஒழிப்புக்கான ஒன்றிணைந்த விசேட பரிசோதனை களவிஜயம் ஒன்று இடம்பெற்றது.
வாழைக்காலை, தாந்தாமலை, செல்வாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இடம்பெற்ற இக்கள விஜயத்தில் ஆறுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் இல்லங்கள், சுற்றாடல்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் உரிய நபர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் எச்சரிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டார்கள்.
இவ்விஜயத்தில் போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன், மண்முனை தென்மேற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.பு.மேனகா,களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர், மட்டக்களப்பு போதைப்பொருள் குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி பொலிசார், கிராம உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் - பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் முதலிய பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.


Post a Comment
Post a Comment