வி.சுகிர்தகுமார் 0777113659
முதலாம்தர மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வுகளுக்கு இணையான நிகழ்வுகள் அம்பாரை மாவட்ட பாடசாலைகளிலும் இன்று (28) காலை நடைபெற்றன.
இதற்கமைவாக திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்திலும் முதலாம் தர மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் மு.சண்டேஸ்வரன்; தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் திருக்கோவில் வலய கல்வி பிரதிக்கல்விப்பணிப்பாளர் மாதுரி மயூரன் திருக்கோவில் வலய ஆசிரியர் வாண்மை விருத்தி நிலைய முகாமையாளர் ந.சுதகாரன் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விரிவுரையாளர் வெ.இராசவேல் பாடாசலை அபிவிருத்திச்சங்க செயலாளர் வெ.சண்முகநாதன் உள்ளிட்ட பாடாசலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
அதிதிகளை வரவேற்கும் நிகழ்வை தொடர்ந்து இரண்டாம்; தர மணாவர்கள் முதலாம் தர மாணவர்களை மாலை அணிவித்து சம்பிரதாயபூர்வமாக வெற்றிலை கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் இணைந்துள்ள புதிய மாணவர்களை இரண்டாம் தர மாணவர்கள் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றதுடன் பெற்றோர்கள் வரவேற்று இனிப்பு பண்டங்களையும் பரிசுப்பொதிகளையும் வழங்கினர்.
மண்டபத்தில் இடம்பெற்ற அதிபரின் தலைமையுரையை தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

Post a Comment
Post a Comment