முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் வைத்தியசாலையில்




 இன்று சமகி ஜன பலவேகய (SJB) நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பாதுகாப்பு உத்தியோகத்தரும் அடங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சமகி ஜன பலவேகய தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.


இன்று பிற்பகல் ஆர்ப்பாட்ட பேரணியை முன்னிட்டு கொழும்பில் பலத்த இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



SJB கடைசி நிமிடம் வரை போராட்டத்தை எங்கிருந்து தொடங்கப் போகிறோம் என்பதை சரியான இடத்தை அறிவிப்பதில் தாமதம் செய்தது.


ஆர்ப்பாட்ட பேரணி இறுதியில் விகாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பித்து பொது நூலகம் நோக்கி சென்றது.


இராணுவமும் பொலிஸாரும் பொது நூலகத்திற்கு அருகில் உள்ள வீதியை மூடிவிட்டு, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் தண்ணீரை பிரயோகித்துள்ளனர்.



ஆர்ப்பாட்ட பேரணிக்கு எதிராக முன்னர் பல நீதிமன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த பேரணி நீதிமன்ற உத்தரவை மீறவில்லை என பிரேமதாச தெரிவித்துள்ளார்