ஆலையடிவேம்பு நிருபர்
வி.சுகிர்தகுமார்
நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மீள்குடியேற்ற திட்டத்தினை துரிதப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக 50 பயனாளிகளுக்கான இலவச குடிநீர் வழங்கும் திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இத்திட்டத்திற்கு 15 இலட்சத்து 34 ஆயிரத்து 354 ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வில் குடிநீர் இணைப்பை பெறுவதற்கான நிதி ஏற்பாட்டு கடிதங்களும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிதியின் ஊடாக குறித்த குடும்பங்கள் இலவசமாக குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளும் நிலையில் அரசாங்கத்திற்கும் அமைச்சுக்கும் பிரதேச செயலகத்திற்கும் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் அரசாங்கம் மக்களது நலனின் அதிக அக்கறை செலுத்தி வருவதுடன் குறித்த ஒரு வருட காலப்பகுதிக்குள் 50 இற்கும் மேற்பட்ட வீடமைப்பு திட்டங்கள் என பல அபிவிருத்திகள் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றுவருவதாக தெரிவி;த்தார்.

Post a Comment
Post a Comment