நன்றி KR TV Network
வாவிக்கரை பகுதியில் அச்சுறுத்தலாக இருந்த முதலை இறந்த நிலையில் கரை ஒதுங்கல்
காத்தான்குடி வாவிக்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் மீனவர்களுக்கும் கடும் அச்சுறுத்தலாக இருந்து வந்த முதலை ஒன்று இன்று காலை இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. அண்மைக் காலத்தில் ஒரு மனித உயிரைப் பலி கொண்டதுடன், பல கால்நடைகளின் உயிர்களையும் காவு கொண்டதாக கூறப்படும் இந்த முதலை இவ்வாறு இறந்த நிலையில் காணப்படுவது குறித்து பிரதேச மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலை கரை ஒதுங்கியுள்ள தகவல் பரவியதைத் தொடர்ந்து, அதை நேரில் பார்வையிடுவதற்காக வாவிக்கரை பகுதிக்கு அதிகளவான மக்கள் தொடர்ச்சியாக வருகை தந்து வருகின்றனர். சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக கவனத்தில் ஈடுபட்டு வருவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நன்றி KR TV Network


Post a Comment
Post a Comment