(வி.சுகிர்தகுமார்
MCI (Merchant Credit and Investment) நிதி நிறுவனம் தேசிய ரீதியில் 1000 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளது.
இதற்காக 4 மில்லியன் நிதியினை செலவிட்டுள்ளது. இந்நிதியானது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் போனஸ் நிதியிலிருந்து 50 வீதத்தினையும் 50 வீதத்தினை நிறுவனமும் பொறுப்பேற்று இவ்வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் 17 இடங்களில் இத்திட்டத்தினை முன்னெடுத்தது.
இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று நிறுவனத்தின் முகாமையாளர் துஸ்யந்தனின் ஒழுங்கமைப்பில் அக்கரைப்பற்று அசெம்பிளி ஒப் கோட் திருச்சபையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் 90 மாணவர்களுக்கு கற்றல் உபகரணப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலய அதிபர் திருமதி நித்தியானந்தன் அசெம்பிளி ஒப் கோட் திருச்சபையின் போதகர் ரவிகரன் பிரதேச செயலகம் சார்பில் கிராம உத்தியோகத்தர் வினிதா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
இங்கு உரையாற்றிய அதிதிகள்; நிதி நிறுவனங்கள் மக்களின் நிதி தேவையினை மாத்திரம் பூர்த்தி செய்கின்றன. ஆனால் நிறுவனம் ஒரு படி மேலாக பிரதான பணியான கல்விக்கு கரம் கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதுடன் பாராட்ட வேண்டிய நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது என்றனர்.
இத்திட்டத்தை முன்னெடுத்துள்ள நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளி;ட்டவர்களை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.

Post a Comment
Post a Comment