சமூக சேவைக்கு ஒளிவிளக்காகத் திகழும் சேவையாளர் விஜயகுமாரன்!



 


நலன் உள்ளிட்ட பல துறைகளில் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான சேவை, மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக எளிய மக்களின் தேவைகளை உணர்ந்து, நேர்மையான அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விதம் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. என்றார்.


இந்த நிகழ்வில் உரையாற்றிய ஏனைய அதிதிகள் “சேவை என்பது பதவியால் அல்ல; மனப்பான்மையால் உருவாகிறது. அந்த உண்மையை தனது செயல்களால் நிரூபித்தவர் கொடை வள்ளல் விஜயகுமாரன் - ஜீவா தம்பதியர்” எனக் குறிப்பிட்டனர். 

அவரது பணிகள் இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாகவும், சமூக மாற்றத்திற்கான ஊக்கமாகவும் திகழ்கின்றன எனவும் கூறினர்.


இந்நிகழ்வின் முடிவில், சமூக சேவையில் அவர் மேற்கொண்ட சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பொன்னாடைகள் போர்த்தி நினைவுச் சின்னமும்  வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

 சேவையின் பாதையில் தொடர்ந்து பயணிக்க அவர் மேலும் உற்சாகம் பெறும் தருணமாக இந்நிகழ்வு அமைந்தது.

விழாவில் கல்முனை நெற் இணையத்தள நிருவாகிகளும் கலந்து கொண்டார்கள்.