( வி.ரி. சகாதேவராஜா)
புத்த சாசன மற்றும் சமயங்கள் கலாசார அமைச்சு மற்றும் கலாச்சார திணைக்களமத்தால் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 2026ஆம் ஆண்டுக்கான அரசு இலக்கிய விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் 2025 டிசம்பர் 31ஆம் தேதி வரை முதன்முறையாக வெளியிடப்பட்ட தமிழ் சிங்கள ஆங்கில நூல்கள் இவ்விருதிற்காக பரிசீலிக்கப்படும்.
விருதிற்கான நூல்கள் கவிதை, சிறுகதை, நாவல், இலக்கியத் திறனாய்வு, ஆய்வுநூல், நாடகம், மொழிபெயர்ப்பு (கவிதை, சிறுகதை, நாவல், நாடகம்), குழந்தைகள் இலக்கியம், அறிவியல் இலக்கியம், வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல்வேறு இலக்கியப் பிரிவுகளில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
விண்ணப்பத்துடன், நூலின் 03 பிரதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
மேலும், தேவையான ஆவணங்கள் மற்றும் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை 2026 மார்ச் 30ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலதிக தகவல்களுக்கு கலாசார அலுவல்கள் திணைக்களம், எண் 3, செத்சிறிபாய மாவத்தை, பத்தரமுல்லை அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 011-2872030 / 011-2872031.
இலக்கிய ஆக்கங்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment