கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பதில் பணிப்பாளராகவும் பதவியேற்றார் பாஹிமா ஜெய்னுலாப்தீன
கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாண பதில் பணிப்பாளராகவும் நேற்றைய தினம் பதவியேற்ற பாஹிமா ஜெய்னுலாப்தீன் அவர்களுக்கு இன் வாழ்த்துக்கள்
இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Town and Country Planning பட்டப்படிப்பையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நகர திட்டமிடல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பெற்று சிறிய வயதில் தனது இலக்குகளை அடைந்துள்ளார்.
இவர் தனது கல்வியை கிண்ணியா மகளிர் கல்லூரியில் பயின்று, 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர் தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் அகில இலங்கையில் முதல் இடத்தை பெற்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
அவரது அறிவும் அனுபவமும் கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சேவையாக அமைய இறைவன் அருள் புரிவானாக. சமூகத்திற்கான பெண் ஆளுமையாக மிளிர்ந்து சிறந்த முறையில் தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்ற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


Post a Comment
Post a Comment