நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மனார் பள்ளிவாசலில் பெண்கள் தராவீஹ் தொழுகைக்காக மேல் தளத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டிட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான சீமெந்து பைகளை வழங்குமாறு அவசர கோரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
பள்ளிவாசல் நிர்வாகத்தினரின் வேண்டுகோளை ஏற்று, தனது சொந்த நிதியில் குறித்த 20 சீமெந்து பைகளையும் அவர் வழங்கியுள்ளார். இவ்வுதவி பெண்கள் தொழுகை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு முக்கிய ஆதரவாக அமையும் என பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கெளரவ பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் அஹமட் அவர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களான முஹம்மட் லாபீர், முஹம்மட் இக்றாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியலைத் தாண்டி, மக்கள் நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்படுவோம் என்பதையும், மத மற்றும் சமூக தேவைகளுக்கு ஆதரவு வழங்குவது சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாகும் என்பதையும் அமீர் அப்னான் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.


Post a Comment
Post a Comment