டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?



 


டெல்லியில் நடந்துவரும் ஏஐ உச்சிமாநாட்டின் தொடக்க நாளில் (திங்கள் கிழமை) கலந்துகொண்டவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மோதி அரசாங்கத்தின் "முழுமையான குழப்பம் மற்றும் கடுமையான நிர்வாகச் சீர்கேடு" என விமர்சித்துள்ளார்.

இந்த உச்சிமாநாட்டின் தொடக்கத்தின்போது நிரம்பி வழிந்த அரங்குகள், நீண்ட வரிசைகள், பலவீனமான இணைய இணைப்பு மற்றும் நுழைவுக்கான அறிவுறுத்தல்களில் குழப்பமான நிலை ஆகியவை காணப்பட்டன.

அதிகப்படியான கூட்டம் காரணமாகப் பாதுகாப்புப் பரிசோதனை செயல்முறையினாலும் மக்களுக்குப் பெரும் சிரமங்கள் ஏற்பட்டன.

பிரதமர் நரேந்திர மோதி மாநாட்டின் எக்ஸ்போவுக்கு வருவதற்கு முன்னதாக சில அரங்குகள் தற்காலிகமாக காலி செய்யப்பட்டன