மகத்தான சேவை நலன் பாராட்டு



(வி.ரி.சகாதேவராஜா )


சம்மாந்துறை வலயத்தின் மல்வத்தை கணபதி புரம் விக்னேஸ்வரா வித்தியாலய ஸ்தாபக அதிபர் சின்னத்தம்பி கிருபைராஜா  தனது 36 வருட கல்விச் சேவையை நிறைவு செய்து 60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு, பாடசாலை சமூகம்  நேற்று முன்தினம்  சேவை நலன் பாராட்டு விழாவை நடாத்தியது.

பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் கலந்து சிறப்பித்தார்.

சம்மாந்துறை வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


விழாவில் சம்மாந்துறை வலய  பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான   எம். வை.அறபாத், பி.பரமதயாளன்,   நுஸ்ரத் நிலோபரா, சித்தி பாத்திமா கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்ரிஏ. ஜனுபர் , கிராம உத்தியோகத்தர் என்.புவனராஜ் ,ஆசிரிய ஆலோசகர் நாசிக் அகமட் உள்ளிட்ட  உத்தியோகத்தர்கள் சிறப்பதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
 
ஓய்வுபெறும் அதிபருக்கு மகத்தான பாராட்டு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வை ஆசிரியர் பெற்றோர் மற்றும் சமூகம் இணைந்து மேற்கொண்டனர்.

 
2003 இல் ஆரம்பிக்கப்பட்ட கணபதிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய ஸ்தாபக அதிபரான சி.கிருபைராஜா 23வருட காலம் தொடர்ச்சியாக அரிய சேவையாற்றினார்.

 இறுதியாக அதிபர் ஏற்புரைநிகழ்த்தினார். அதிபரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

இறுதியில் சமூகம் விருந்து வைத்து கௌரவித்தது.