ஆனந்த சங்கரிக்கு கௌரவம்





ஸ்ரீலங்கா சமத்துவ முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வும், கௌரவிப்பும்  அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.(04)


ஸ்ரீலங்கா சமத்துவ முன்னணியின் செயலாளர் இப்றான்ஷா பெளறுடீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமீழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீ.ஆனந்த சங்கரி பிரதம அதிதியாகவும், இந்தியா பேராயம் அரூட் கலாநிதி யோண் போல், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், பிரதித் தவிசாளர் பாறூக் நஜித், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர், சட்டத்தரணி  எஸ்.எம். ஏ.கபூர் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.


இதேவேளை அதிதிகளினால் ஸ்ரீலங்கா சமத்துவ முன்னணியின் பிரதான காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.