உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று



 

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (பெப்ரவரி 25) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.


இது குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்


மின்சார நுகர்வோர் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினர் தமது எழுத்துமூல அல்லது வாய்மூல கருத்துகளை சமர்ப்பிக்க மார்ச் 18 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


நாடு தழுவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி ஐந்து பிரதான இடங்களில் இந்த அமர்வுகள் நடைபெறவுள்ளன:


  • மார்ச் 07: அம்பாறை (முதலாவது அமர்வு)
  • மார்ச் 11: வவுனியா
  • மார்ச் 12: மாத்தளை
  • மார்ச் 16: அம்பாந்தோட்டை
  • மார்ச் 18: இறுதிக்கட்ட வாய்மூல ஆலோசனை அமர்வு