சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய விவசாய நில அளவின் எண்ணிக்கை 2824 ஏக்கர்



 


வி.சுகிர்தகுமார்
      

 அம்பாரை மாவட்டம் சாகாமம் நீர்ப்பாசன குளத்தின் மூலமும் மற்றும் பன்னலகம அம்பலன் ஓயா வடிச்சல் நீர் மூலமும் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய விவசாய நில அளவின் எண்ணிக்கை 2824 ஏக்கராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் (13)இடம்பெற்ற சிறுபோகச் செய்கை தொடர்பான ஆரம்ப கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பகுதியில் சிறுபோக செய்கை மேற்கொள்ளக்கூடிய  2824 ஏக்கர்களில் நேரடிப்பாய்ச்சலாக 1285 ஏக்கரும் பன்னலகம வடிச்சல் மூலம் 972 ஏக்கரும் அம்பலன் ஓயா வடிச்சல் மூலம் 567 ஏக்கரும் செய்கை பண்ணவும் விவசாயிகளின் விருப்பின் பேரில் விபுலானந்தா காணி உள்ளிட்ட 140 ஏக்கர் காணி செய்கை பண்ணவும் அனுமதியளிக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ்; தலைமையில் நடைபெற்ற சிறுபோகச் செய்கைக்கான கூட்டத்தில்
இக்கூட்டத்தில் தம்பிலுவில் மாகாண பிரதி நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் இராஜேஸ்கண்ணா மற்றும் பிரதேச நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்;; உள்ளிட்ட அதிகாரிகள் விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள், விவசாய பிரதிநிதகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பிரகாரம் பட்டிமேடு வடக்கு, பட்டிமேடு தெற்கு, பட்டிமேடு மத்தி, மொட்டையாகல், சேனைக்கண்டம் தெற்கு, சேனைக்கண்டம் வடக்கு ஊரக்கை கண்டம் தாலிபோட்டாறு வடக்கு ஆத்துக்கண்டம் தாலிபோட்டாறு தெற்கு ஆத்துக்கண்டம் சுவாமி விபுலானந்தா இல்லக்காணி; அனுமதியளிக்கப்பட்டது.