“மலேரியாவைத் தடுப்போம் - பரிசோதனை செய்துகொள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் 2026 இன்று உலக மலேரியா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பயணங்களின் பின்னர் காய்ச்சல், தடிமல், உடல் வலி, பிளேட்லெட் எண்ணிக்கை குறைவு போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மலேரியா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மலேரியா பாதிப்பு அதிகம் காணப்படும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன் தடுப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தங்களது பாதுகாப்பை உறுதிசெய்து, மலேரியா தொற்று நாட்டிற்குள் பரவாமல் தடுப்பதில் அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மலேரியா தொடர்பான மேலதிக தகவல்களுக்கு: - 071 2841767


Post a Comment
Post a Comment