ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல்



 


ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் திட்​ட​மிட்டுள்​ளது.


போர் காரண​மாக ஹோர்முஸ் நீரிணையை ஈரான் இராணுவம் மூடியுள்ளது. இதே​போல இந்த நீரிணை​யின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்கப்பல்​கள் நிறுத்​தப்​பட்டு உள்ளன. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில், “காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என்று எச்சரித்துள்​ளார்.


ஈரான் உயர் தலை​வர் மோஜ் தபா கொமெய்னி நேற்று வெளியிட்ட அறிக்கை​யில், “ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்களின் மனதில் அச்சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது. இதற்கு இடம் கொடுக்கக்​ கூ​டாது’’ என்று தெரி​வித்​துள்​ளார்.


இதனிடையே அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய பாகிஸ்​தான், துருக்​கி, எகிப்து உள்​ளிட்ட நாடு​கள் தீவிர முயற்சி செய்து வரு​கின்​றன. இதுதொடர்​பாக அமெரிக்க இராணுவ வட்டாரங்​கள் கூறியதாவது: சீனா​வில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்​கள், வெடிபொருட்​கள் கொண்டு செல்​வதை தடுக்க ஹோர்முஸ் நீரிணை பகுதியை முழு​மை​யாக முடக்கி உள்​ளோம்.


ஈரானின் சரக்கு கப்​பல்​களை அடுத்​தடுத்து கைப்​பற்றி வரு​கிறோம். இதனால் இராணுவ, பொருளாதா​ர ரீ​தியி​லான நெருக்​கடியை சமாளிக்க முடி​யாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்​திடும் என்று எதிர்பார்க்கிறோம். ஒரு​வேளை அமைதி பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தால் ஹோர்முஸ் நீரிணையில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்தப்படும். தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டுள்​ளன.


மேலும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் சுமார் 300-க்​கும் மேற்பட்ட போர் விமானங்​கள் உள்​ளன. ஹோர்முஸ் நீரிணை பகு​தி​யில் வீசப்​பட்டு உள்ள கண்ணிவெடிகளை படிப்​படி​யாக அகற்றி வரு​கிறோம். மேலும் கண்​ணிவெடிகளை வீசும் ஈரான் படகு​களை சுட்டு வீழ்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்​தர​விட்டுள்​ளார். இவ்​வாறு அமெரிக்​க இராணுவ வட்டாரங்கள்​ தெரி​வித்​தன.