பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த 'சாகரிக்கா' ரயிலில் பணியாற்றிய ஊழியர்கள் நால்வரை பணியிடை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த ரயிலில் பணியாற்றிய சாரதி, காப்பாளர், உதவிச் சாரதி மற்றும் உதவி ரயில் காப்பாளர் ஆகியோரே பணியிடை நீக்கம் செய்யப்படவுள்ளார்கள்.
கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் 24ஆம் திகதி தடம் புரண்டிருந்த 'சாகரிக்கா' ரயில் சீர்செய்யப்பட்டு மீண்டும் கொழும்பு நோக்கி சென்றபோது கொம்பனித்தெரு ரயில் நிலையத்துக்கு அருகில் மீண்டும் தடம் புரண்டுள்ளதன் காரணமாகவே பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment