சிஎஸ்கே அணியின் 'ஆச்சரிய' உத்தி தவறாக முடிந்ததா? வெற்றியை தடுத்த 3 விஷயங்கள்



 சேப்பாக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக எதிர்பாராத வகையில் ஒரு பெரிய தோல்வியை சந்தித்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். ஆடுகளம் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்க, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதை எவ்வித சிக்கலும் இல்லாமல் நிதானமாக 16.4 ஓவர்களிலேயே சேஸ் செய்துவிட்டது குஜராத் டைட்டன்ஸ்.

இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் பௌலர்கள் மிகச் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதன்பிறகு தன் சொந்த மண்ணில் சாய் சுதர்ஷன் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒட்டுமொத்தமாக பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் சூப்பர் கிங்ஸை எளிதாக வீழ்த்திவிட்டது டைட்டன்ஸ்.

மும்பைக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டு இந்தப் போட்டிக்குள் வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. வெற்றிப் பாதைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இந்த செயல்பாடு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்திருக்கிறது. மேலும், இந்தப் போட்டியை அவர்கள் அணுகியவிதம் கேள்வியை எழுப்பும் விதமாகவும் அமைந்திருக்கிறது