பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேச சபையின் 05ஆவது சபையின் 07ஆவது அமர்வு இன்று (23) சபா மண்டபத்தில் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது.
வழமையான சபை நடவடிக்கைகளுடன் ஆரம்பமான இந்த அமர்வில், அமர்வின் தொடக்கத்தில், உபகுழு நியமனங்களில் சிக்கல்கள் உள்ளதாகவும், உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடுகள் உரிய முறையில் செய்யப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டி, உப தவிசாளர் எம்.ஐ. இர்பான் மற்றும் உறுப்பினர்களான எம்.ஏ.எம். றசீன், எம்.ஐ.எப். றிஹானா ஆகியோர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இருப்பினும், அவர்களின் வெளிநடப்பிற்கு பின்னர் சபை நடவடிக்கைகள் வழமையான முறையில் சுமுகமாகத் தொடர்ந்தன.
அமர்வின் போது, சபை உறுப்பினர்களின் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை தொடர்பாக விரிவான விவாதங்கள் நடைபெற்றதுடன், பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், நிந்தவூரில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் நிலவி வரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் பணிகளை துரிதப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைப்பு வழங்க ஒப்புக்கொண்டனர்.


Post a Comment
Post a Comment