ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முன்னேற்றமடைந்து வருவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில், உயிர்த்த ஞாயிறு தினத்தில், நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமாக கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதனைமுன்னிட்டு இன்று குறித்த ஆலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனைகளின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று காலை 8:43 முதல் 08.45 வரையிலான இரண்டு நிமிட மௌனம் அஞ்சலி செலுத்தி உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்படவுள்ளது. கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ள இன்று காலை 7 மணி முதல் நினைவேந்தல் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment