இந்த நீரிணை, சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட மாநாட்டின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இது வணிக கப்பல்களில் கடல்சார் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
இந்த நீரிணை, சர்வதேச கடல்சார் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட மாநாட்டின் (UNCLOS) கீழ் நிர்வகிக்கப்படுகிறது, இது பொதுமக்களின் கடல்சார் போக்குவரத்திற்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய முயல்கிறது.
பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இரான் இதற்கு முன்பு ஒருபோதும் ஹோர்மூஸ் நீரிணையை மூடியதில்லை.
ஆபத்தான முன்னுதாரணம்
எனவே, இரான் அடுத்து என்ன செய்யக்கூடும்? நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக இரானிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அந்த திட்டம் ஒன்பது அம்சங்களைக் கொண்டுள்ளது.
அதன் முக்கிய விதிகளில் ஒன்று, "எதிரிக் கப்பல்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டாது" என்று கூறுகிறது. அதற்கு மாற்றாக, இரான் பயணச் சேவைகளை வழங்கும். இதற்கு நிறுவனங்கள் இரானிய நாணயத்தில் பணம் செலுத்த வேண்டும் மற்றும் இரானிய வங்கி கணக்கை வைத்திருக்க வேண்டும். கப்பல்கள் தங்கள் சரக்குகள் குறித்த விவரங்களையும் அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் சிக்கலான இந்தத் திட்டத்துக்கு இன்னும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு இரான் உண்மையிலேயே கட்டணம் விதித்தால், அமெரிக்காவும் அதன் மேற்கத்திய மற்றும் பிராந்திய நட்பு நாடுகளும் அத்தகைய நடவடிக்கையை ஏற்குமா என்பதுதான் முக்கியக் கேள்வி.
இத்திட்டத்துக்கு சமீபத்தில் எழுந்துள்ள எதிர்வினைகள் கடும் எதிர்ப்பையே காட்டுகின்றன, ஏனெனில் கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரம் என்பது அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஒரு முக்கியக் கொள்கையாகும். மேலும் எந்தவொரு கட்டண முறையும் ஓர் ஆபத்தான முன்னுதாரணமாகவே பார்க்கப்படும்.
இரான் இதில் வெற்றி பெற்றால், அது ஒரு குறிப்பிடத்தக்க உத்தி மற்றும் அடையாள வெற்றியாக அமையும்.
மேலும் உலகின் மிக முக்கியமான கடல்சார் பாதைகளில் ஒன்றை கட்டுப்படுத்தும் தனது திறனை இரான் நிரூபிக்கும்.
இருப்பினும், இத்தகைய நடவடிக்கை அமெரிக்காவின் நட்பு நாடுகள், நேட்டோ உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய சக்திகளை இரானுக்கு எதிராக ஒன்றுபடுத்துவதன் மூலம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அதேபோல், ஒருங்கிணைந்த ராஜீய, பொருளாதார அல்லது ராணுவ ரீதியான பதிலடிகளுக்கு வழிவகுக்கும் அபாயமும் இதில் உள்ளது.


Post a Comment
Post a Comment