பேராசான் அப்துல் மலிக் அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.
இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை.
மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில் என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...
மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர்.
என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.
வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.
இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.
எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன். அவர்களின் திடீர் மறைவு செய்தி அளவிட முடியாத துயரத்தை அளிக்கிறது.
மருதமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அல்-மனாரின் பழைய மாணவர். உயர் கல்விக்காக பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவை அவர் தெரிவு செய்தார். கல்வி எனும் பெருங்கடலில் நீந்தி, கடல் கடந்து இஸ்லாமாபாத் சர்வதேச பல்கலைக்கழகத்தில் மத ஒப்பீட்டியல் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சர்வதேச அளவில் பல ஆய்வு மாணவர்களை உருவாக்கியவர்.
இடையறாத பணிக்கு மத்தியில் இலங்கையில் வெளியாகும் இஸ்லாமிய சிந்தனை, அல் ஹஸனாத் போன்ற சஞ்சிகைகளுக்கு அவர் எழுதி வந்த ஆய்வுக் கட்டுரைகள் மிகப் பெறுமதியானவை.
மணிக்கணக்கில் தொலைபேசியில் தொடர்புகொண்டு பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொள்ளும் அன்பர். மாணவப் பருவத்திலேயே அவருடன் உரையாடிப் பழகும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சுவாரசியம் நிறைந்த உரையாடல்கள் அவரது புலமையை வெளிப்படுத்தி எமது ஆர்வத்தை தூண்டுபவை. பெரியார் குறித்தும் அவரது சமூக நீதி கருத்துக்கள் குறித்தும் அண்மையில் என்னுடன் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் நினைவில் வந்து போகின்றன...
மதம், அரசியல், தத்துவம் என விரியும் அறிவார்ந்த உரையாடல்கள், குடும்ப நலன் வரை பரவியவை. கள யதார்த்தங்களை நன்கறிந்தவர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இயங்கியலையும் அதற்குள் இருக்கும் நுண்ணரசியல் குறித்தும் தெளிவான புரிதலுடையவர்.
என்னுடன் தனிப்பட்ட அன்பு கொண்ட அவர், எனது தொழில் வாழ்க்கையைப் பற்றியும் அக்கறையுடன் கேட்டறிவார்.
வெளிநாட்டு வாழ்கையை முடித்து தாய் நாடு திரும்பி கல்விப் பணியாற்றும் எண்ணம் கொண்டிருந்தார். மருதமுனையின் சமய, சமூக, கல்வி நிலைமைகள் குறித்து அக்கறையுடன் அவ்வப்போது கேட்டறிவார்.
இன்று, ஒரு மூத்த சகோதரனை இழந்த துயரத்தை உணர்கிறேன். நிலையற்ற உலகின் யதார்த்தத்தை இத்தகைய திடீர் மறைவுகள் எமக்கு உணர்த்துகின்றன.
எல்லாம் வல்ல இறைவன், அன்னாரின் பாவங்களை மன்னித்து, தனது அருளும் அன்பும் கொண்ட இறக்கைகளுக்குள் அவரை அரவணைத்தருள்வானாக. ஆமீன்.

Post a Comment
Post a Comment