234 தொகுதிகளில் 115 இடங்களில் தவெக முன்னிலை



 


தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 115 தொகுதிகளில் தவெக முன்னிலை வகித்து வருவதைத் தொடர்ந்து தமிழக வரலாற்றில் புதிய கட்சியொன்று முன்னிலை வகித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் நடவடிக்கை காலை 8 மணிக்கு ஆரம்பமானது. 


முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு சுற்று வாரியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. 


அதன்படி, திமுக கூட்டணி 56 இடங்களிலும் அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் தவெக 105 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றது. நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடத்தில்கூட முன்னிலை இல்லை.


இத் தேர்தலில் மொத்தம் 4.61 இலட்சம் தபால் வாக்குகள் பதிவாகியிருந்தது