மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் விபத்து; 26 பேர் வைத்தியசாலையில்



 


மொனராகலை - சியம்பலாண்டுவ பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 26 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.