மற்றுமொரு அரச உயர் அதிகாரி இராஜினாமா



 


இலங்கையின் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் (IDB) தலைவராக இருந்த ரவி நிஸ்ஸங்க, அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.


மேலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ கடிதம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.