கண்டி, ஈ.எல். சேனாநாயக்க வீதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள 6 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று (24) முற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரும் பேராதனை போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
இரண்டாவது மாடியில் வெளிப்புறமாக நீட்டப்பட்டிருந்த கொன்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததே இவ்விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment