சீனாவில் வெடித்துச் சிதறிய நிலக்கரிச் சுரங்கம் - 82 பேர் உயிரிழப்பு



 


வட சீனாவின் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பினால் 82 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


நேற்று (22) அந்நாட்டு நேரப்படி இரவு 7.29 இற்கு ஷாங்க்ஸியில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்டுள்ளது.


இந்த வெடிப்புச் சம்பவத்தில் அந்நேரத்தில் 247 ஊழியர்கள் அங்கு பணியாற்றியுள்ளனர்.


குறித்த இடத்தில் மீட்புப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.