அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பார்வையாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி, பார்வையாளர்களுக்கான புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒரு நோயாளியை ஒரே நேரத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். தொற்று நோய்களின் பரவலைத் தடுக்க, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் வைத்தியசாலைக்கு வராமல் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 12 வயதிற்கு குறைவான சிறுவர்களின் வருகை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலை வளாகத்தில் அமைதியை பேணுதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் ஓய்வை பாதிக்கும் எந்தவொரு செயல்களிலும் ஈடுபட வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.