நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர், உயிரிழப்பு



   


நயினாதீவு கடலில் விழுந்து பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


குறித்த அதிபரும் ஆசிரியர் ஒருவரும் பயணிகள் படகை தவறவிட்டமையால் கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகொன்றில் நயினாதீவிலிருந்து குறிகட்டுவான் நோக்கி பயணம் செய்துள்ளனர்.


இந்நிலையில் குறித்த கடல் கொந்தளிப்பாக காணப்பட்டமையால் படகு கடல் அலையில் சிக்கியுள்ளது. 


இதன்போது படகில் இருந்த அதிபர் நிலை தடுமாறி கடலில் விழுந்துள்ளார்.


கடலில் விழுந்த அதிபரை படகோட்டி மீட்க முற்பட்டபோதிலும் அவர் உயிரிழந்துள்ளார்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.