2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
இன்று (19) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2024 இல் 711 மாணவர்களும் 2025 இல் 885 மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லாதவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இடைவிலகல் மற்றும் மீள்சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment