நூருல் ஹுதா உமர்
அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களின் நிந்தவூர் விஜயத்தை முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் அஷ்ரப் ஞாபகார்த்த கலாச்சார மண்டபத்தை அண்மித்த பகுதிகளில் துப்புரவு மற்றும் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று (19) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, பிரதேச சபை உறுப்பினர்கள், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரஜா சக்தி தவிசாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் தன்னார்வ அடிப்படையில் இணைந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக பிரதேச சபை ஊழியர்களினால் குறித்த பகுதிகள் கட்டம் கட்டமாக சுத்தப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கலாச்சார மண்டபத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டதுடன், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
UMAR LEBBE NOORUL H


Post a Comment
Post a Comment