ஆலையடிவேம்பு நிருபர்
அன்மைக்காலமாக அரச திணைக்களங்களின் தகவல்கள் மற்றும் தனிநபர் சமூக வலைத்தளங்கள் வங்கிக்கணக்குகள் மீதான ஹக்கர்களின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.
இதில் இருந்து அரச அதிகாரிகள் தங்களை பாதுகாத்துக்கொள்வது தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வளவாளர்களாக ஏ.எம்.முஜாகித் எம்.ஏ.எம்.முர்சித் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.அகீல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது அரச உத்தியோகத்தர்கள் இதுவரையில் தாம் எதிர்கொண்ட ஹக்கர்களின் தாக்கம் தொடர்பில் வெளிப்படுத்தினர்.
இவற்றில் இருந்து பாதுகாத்து கொள்வது தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பில் வளவாளர்கள் தெளிவூட்டினர்.


Post a Comment
Post a Comment