இரத்ததான முகாம்



 


ஆலையடிவேம்பு நிருபர்


வி.சுகிர்தகுமார்       

 அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று (01) ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
உழைக்கும் மக்களின் உழைப்பாளிகள் தினமான மேதினத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் மற்றும் இரத்தவங்கி பிரிவின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய இரத்ததான முகாம் அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கழகத்தின் தலைவர் இன்பராஜா தலைமையில் சிரேஸ் கழக வீரர்களான கணக்காளர் புனிதராஜ் பொது கணக்காய்வு விசாரணை உத்தியோகத்தர் தர்சன் ஆகியோரின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இரத்ததான முகாமில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின்; இரத்தவங்கி பிரிவின் வைத்திய அதிகாரி பி.எம்.கவிதா தலைமையிலான வைத்திய குழுவின் கலந்து கொண்டு இரத்தம் சேமிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தனர்.
இதில் அதிகளவான கழக அங்கத்தவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு இரத்தானம் செய்தனர்.