முன்னாள் நீதவான் ரஞ்சித் குமாரின் விளக்கமறியல் நீட்டிப்பு




களுவாஞ்சிக்குடி முன்னாள்  இடைநிறுத்தப்பட்ட நீதவான் ரஞ்சித் குமாரினை  இம்மாதம் 15ந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  களுவாஞ்சிக்குடி  கௌரவ நீதவான் பிரதீபன் இன்று கட்டளை பிறப்பித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடி நீதிமன்றின் வழக்குச் சான்றுப் பொருளான ரூபா 408 000.00 பெறுமதியான மரத் தனபாடப் பொருட்களை தனது சொந்த தேவைக்குப் பயன் படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபராக இவரை களுவாஞ்சிக்குடி பொலிசார்  B/529 என்ற வழக்கில். குறிப்பிட்டுள்ளனர்  

குறித்த வழக்கிவ் ரஞ்சித் குமார் கடந்த 42  நாட்களாக பாதுகாப்பு நலன் கருதி பொலன்நறுவ சிறைச்சாலையில்  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வீடியோ மூலம் தோன்றியிருந்தார்