சற்று முன் கொழும்பு – ஓட்டமாவடி பிரதான வீதியின் புனாணை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவை பிரதேசத்திலிருந்து ஓட்டமாவடி நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும், மட்டக்களப்பு பகுதியிலிருந்து வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment