ஆலையடிவேம்பு நிருபர்
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக அனுபவமா மங்கள விக்கிரமாராச்சி கடயேற்றதன் பின்னராக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான முதல் களவிஜயம் ஒன்றினை இன்று (10) மேற்கொண்டார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொண்டார்.
சுமார் 32 வருடங்களாக காணி அளிப்பு பத்திரம் இன்றி வாழும் மக்களுக்கான அளிப்பு பத்திரங்கள் வழங்கல் மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தி வேலைத்திட்டமான நெல் உலர்த்தும் ஆலை வேலைத்திட்டத்தினை பார்வையிடல் கண்ணகிகிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வருமானம் குறைந்த மக்களுக்கான வீடுகளை கையளித்தல் அலிக்கம்பை கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு என பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.
பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த அவர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டதுடன் இவ்வருடத்தில் இடம்பெறவுள்ள பிரதேச உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டார்.
நிகழ்வில் மாவட்ட உதவித்திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஏ.முனாசிர் மாவட்ட கணக்காளர் ஏ.எல்.மஹ்ரூப் மாவட்ட உள்ளக கணக்காய்வாளர் எம்.ரமேஸ் மாவட்ட பொறியியலாளர் சாளிர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அதிகாரி மாவட்ட உதவிப்பிரதேச செயலாளர் சாமர பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் கணக்காளர் அரசரெத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலிக்கம்பை கிராமத்தில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் அக்கிராமத்தின் தேவாலாய பங்குத்தந்தை மற்றும் கிராமத்தவர்கள் அரச அதிபரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறித்த கோரிக்கைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாக அரசாங்க அதிபர் இங்கு குறிப்பிட்டார்.

Post a Comment
Post a Comment