இலங்கை கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவால் தொகுக்கப்பட்ட “Sri Lanka’s Maritime Heritage and Historical Significance” என்ற புதிய ஆய்வு வெளியீட்டின் தொடக்க விழா கடந்த 12ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இந்த நூல் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் அறிஞர்களின் கூட்டு பங்களிப்பில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் கடல்சார் வரலாறு, தொல்லியல் மற்றும் வர்த்தகப் பாரம்பரியம் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய இந்த நூல், தேசிய அளவில் முக்கியமான ஆய்வு வளமாக இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் இராணுவம், விமானப்படை, கடற்படை அதிகாரிகள், பல்கலைக்கழக பிரதிநிதிகள் மற்றும் தொல்லியல் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment