(செ.திவாகரன்)
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹட்டன் வீதிக்கருகிலுள்ள சந்தியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பாடசாலை மாணவர்களும் ஒரு பெண் அடங்களாக மூவர் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பதுளை பிரதான வீதியிலிருந்து நுவரெலியா பிரதான நகர் நோக்கி பயணித்த வேனொன்றும் நுவரெலியா நகரில் இருந்து நானுஓயா நகர் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(செ.திவாகரன்)


Post a Comment
Post a Comment