நெல் உலர்த்தும் அடிக்கல் நடும் நிகழ்வு



 


சுகிர்தகுமார்          

அரசாங்கத்தின் சமூக சக்தி 'ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டம்' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நெல் உலர்த்தும் ஆலை மற்றும் ஆரோக்கிய உணவு விற்பனை நிலைய விஸ்தரிப்பு நிலைய திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (02)(நடைபெற்றது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அனுசரணையுடன் 30 மில்லியன் நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆh.திரவியராஜ்; தலைமையில் சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆரோக்கிய உணவு விற்பனை நிலைய விஸ்தரிப்பு நிலைய வேலைத்திட்டமும் பனங்காடு பிரிவில் நெல் உலர்த்தும் ஆலை நிலைய நிர்மாணிப்பு வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது
நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு இணைப்பாளர் ஆர்.ரதீசன் திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் பிரஜாசக்தி தவிசாளர்கள், ஆலய தலைவர்கள் விவசாயிகள்;, பொதுமக்கள், அரச அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் விவசாயிகளின் நன்மை கருதியும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.