இலங்கையில் நிலவும் பல்முக வறுமையை ஒழித்து, கிராமியப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் அனுசரணையுடன் "ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள்" எனும் புதிய தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வரிப்பணத்திலிருந்து 25,000 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் இப் பாரிய செயற்திட்டம் ஜூன் மாதம் 02ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் கீழ், அம்பாறை மாவட்டத்தின் முதலாவது பிரதான ஆரம்ப நிகழ்வு நேற்று (02) சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரமுனை சுவீஸ் கிராண்ட் மஹால் மண்டபத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


Post a Comment
Post a Comment