காணி விடுவிப்பு கோரி பலாலியில் 6ஆவது வாரமாக போராட்டம்




 வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி, பலாலி சந்தியில் இன்று (27) ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கடந்த 36 ஆண்டுகளாக தமது காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள தமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.