பதுளை,எல்ல வெல்லவாய பிரதான வீதியின் இன்று (03,), ராவணா எல்ல பகுதிக்கு கீழே கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காரில் பயணித்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு, பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன்,விபத்து நடந்த போது பெண்ணே காரைச் செலுத்தியுள்ளார் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment