வடமாகாண ஆளுநரால் வவுனியா மாநகர முதல்வரின் பதவி வறிதாக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவு கோரும் மனு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
மனுவை பரிசீலித்த வவுனியா மேல் நீதிமன்றம், வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கி வடமாகாண ஆளுநர் எடுத்திருந்த தீர்மானத்துக்கு எதிராக ஜூலை 15ஆம் திகதி வரை இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.


Post a Comment
Post a Comment