மட்டக்களப்பு இ.போ.சபையினால் உகந்தை, கதிர்காமத்திற்கான விசேட பஸ் சேவைகள்- இன்றைய தினத்தில் இருந்து ஆசனப் பதிவுகள் ஆரம்பம்!
கதிர்காமம் மற்றும் உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயங்களின் வருடாந்த ஆடி வேல்விழா மற்றும் பாதயாத்திரையை முன்னிட்டு, மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துச் சபையினரால் (இ.போ.ச) விசேட பஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இவ்விசேட போக்குவரத்துச் சேவைக்கான முன்பதிவு (ஆசனப் பதிவுகள்) இன்றைய தினத்தில் (04.07.2026) இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சாலை முகாமையாளர் அறிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment