மாவடிப்பள்ளியில் கார் விபத்து



மாவடிப்பள்ளியில் கார் விபத்து – பள்ளிவாசல் முன்பாக மதிலை உடைத்து வளவுக்குள் பாய்ந்த வாகனம்.!!


காரைதீவு மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற விபத்தில், வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வளவுக்குள் புகுந்து மதிலை உடைத்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.